இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தற்போது விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது இதில் முதல் போட்டி முடிவுற்றது. இதில் இந்திய அணி க௨95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனை தொடர்ந்து இரண்டாவது போட்டியானது அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. இதில் முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் வீழ்த்தியுள்ளார்.
இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. முதல் போட்டியில் ஜெய்ஸ்வால் ஸ்டார்க் இடம் ஸ்லெட்ஜிங் செய்தது குறிப்பிடத்தக்கது. அதற்கு பதிலடியாக ஸ்டார்க் இரண்டாவது போட்டியில் ஆட்டத்தின் முதல் பந்திலேயே அபாரமாக விக்கெட்டை வீழ்த்தினர்.
இந்த போட்டியில் மிட்செல் ஸ்டார்க் மொத்தமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஜெய்ஸ்வால்,கே எல் ராகுல், விராட் கோலி, நிதிஷ் குமார் ரெட்டி, ரவி அஸ்வின், ஹர்ஷித் ராணா என முக்கிய வீரர்களின் 6 விக்கெட்டுகளை எடுத்து குறைவான ரன்களில் மடக்கினார்.தற்போது ஆஸ்திரேலிய அணி 97/2 என்ற கணக்கில் விளையாடி வருகிறது.