இன்று முதல் தொடக்கம்!! அகில இந்திய மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு!!
நாடு முழுவதும் மருத்துவ பட்டிப்புகளை படிப்பதற்கு நீட் என்னும் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பு பயில முடியும்.
இந்த வகையில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் போன்ற படிப்புகளுக்கு 15 சதவீத இட ஒதிக்கீடு அகில இந்திய ஒதுக்கீடு சார்பில் ஒதுக்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகின்றது.
மேலும் இந்த இடங்களுக்கு என்று எய்ம்ஸ் ,ஜிப்மர் ,நிகர்நிலைப் பல்கலைகழகம் ,மற்றும் மத்திய பல்கலைகழகம் போன்ற கல்லூரிகளில் எம்பிபிஎஸ் ,பிடிஎஸ் போன்ற படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகின்றது.
இந்த கலந்தாய்வு மத்திய சுகாதார துறை அவர்களின் தலைமையில் மருத்துவ கலந்தாய்வு குழு நடைபெற்று வருகின்றது.இவை அனைத்தும் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் போன்ற படிப்புகளுக்கான கலந்தாய்வு இணைய வழியில் நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் நடப்பு ஆண்டிற்கான கலந்தாய்வு ஜூலை 20 ம் தேதி ஆனா இன்று தொடங்குகிறது .இந்த கலந்தாய்வு கூட்டம் ஆகஸ்ட் 6 ம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்த முதல் கட்ட கலந்தாய்வு சுற்று ஆகஸ்ட் மாதம் வரை செயல்பட உள்ள நிலையில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு சுற்று ஆகஸ்ட் 9 ம் தேதி நிறைவடைகின்றது.
அத்தனை அடுத்து மூன்றாம் கட்ட கலந்தாய்வு அகஸ்ட் அகஸ்ட் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் மீதமுள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கு செப்டம்பர் 21 ம் தேதிவரை சிறப்பு கலந்தாய்வு நடைபெறும் என்று கூறப்படுகின்றது.