‘பெத்தாங்’ விளையாட்டை மாநில அரசு மற்றும் SAI இல் சேர்க்க வேண்டும்! சிறுவர்கள் கோரிக்கை!

0
191
#image_title

‘பெத்தாங்’ விளையாட்டை மாநில அரசு மற்றும் SAI(இந்திய விளையாட்டு ஆணையம்)-யில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி 100 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் புதுச்சேரி ஸ்டேடியத்தில் விளையாடி வலியுறுத்தினார்.

1907-ம் ஆண்டு பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஜூலெஸ் லீனோர் என்பவரால் உருவாக்கப்பட்ட விளையாட்டுதான் ‘பெத்தாங்’. பழங்காலத்தில் மரப்பந்துகளை வைத்து கிரேக்கர்கள் விளையாடிய ஒரு விளையாட்டுதான் பெத்தாங்குக்கு முன்னோடி என்று சொல்லலாம்.

கிரேக்கர்களுடைய இந்த விளையாட்டு, ரோம் வழியாகத் தெற்கு பிரான்ஸுக்குச் சென்று, அங்கு பெத்தாங்காக மாறியது. பிரான்ஸில் மரப்பந்துகளுக்குப் பதில் இரும்புப்பந்துகள் பயன்படுத்தப்பட்டன.

இதில் இரு அணிகளாக இரண்டு பேர், நான்கு பேர், ஆறு பேர் வரை இதில் விளையாட முடியும். புதுச்சேரியை விட்டு வெளியேறிய பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரி மண்ணில் விட்டுச்சென்ற பல கலாசார விஷயங்களில் ‘பெத்தாங்’ விளையாட்டும் ஒன்று. தற்போது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இதனை விளையாடி வருகின்ற்னர்.

இந்நிலையில் ‘பெத்தாங்’ விளையாட்டை மாநில அரசின் விளையாட்டுகளில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி சிறுவர்கள் 100 க்கும் மேற்பட்டோர் இந்த ‘பெத்தாங்’ விளையாட்டை புதுச்சேரி இந்திராகாந்தி விளையாட்டு அரங்கில் விளையாடினர்.

புதுச்சேரியின் பாரம்பரியமான இந்த விளையாட்டு SAI (இந்திய விளையாட்டு ஆணையம்) யிலும் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.