Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீசி தாக்குதல்! ஜன்னல் கண்ணாடிகள் உடைப்பு

#image_title

வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீசி தாக்குதல்! ஜன்னல் கண்ணாடிகள் உடைப்பு

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலினால் ரயில் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இன்று காலை 5:45 நிமிடத்திற்கு புறப்பட வேண்டிய ரயில் 4 மணி நேரம் கால தாமதமாக 9: 45 க்கு புறப்பட்டது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் இன்று காலை விசாகப்பட்டினத்திலிருந்து செகந்திராபாத் செல்லும் வந்தே பாரத் ரயில் புறப்படுவதற்கு தயாராக இருந்தது. இந்த நிலையில் அங்கிருந்த மர்ம நபர்கள் ரயில் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர்.

இதில் ரயிலின் ஜன்னலோர கண்ணாடிகள் உடைந்தது. இது குறித்து உடனடியாக ரயில்வே போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் ரயிலை பார்வையிட்ட ரயில்வே போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக 5: 45க்கு புறப்பட வேண்டிய ரயில் 4 மணி நேரம் தாமதமாக 9:45க்கு புறப்பட்ட சென்றது.

Exit mobile version