டாஸ்மாக்கில் கூடுதல் தொகை வசூலித்தால் கடும் நடவடிக்கை!! அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

0
155
Strict action if extra amount is charged in Tasmac!! Minister's action announcement!!

டாஸ்மாக்கில் கூடுதல் தொகை வசூலித்தால் கடும் நடவடிக்கை!! அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

சுகந்திர போராட்ட வீரர் பொல்லானின் 218 வது நினைவு நாளையொட்டி ஈரோட்டிற்கு வருகை தந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, சுகந்திர போராட்ட வீரர் பொல்லன் அவர்களுக்கு கூடிய விரைவில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று கூறினார்.

மேலும் தமிழகத்தில் கண்ணாடி பாட்டில்களுக்கு பதில் இனி டெட்ரா பேக்கின் மூலம் மது பாட்டில்கள் விற்பனை  செய்யப்பட இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் போலி மதுபானங்களை தடுக்கும் விதமாக கண்ணாடி பாடில்களுக்கு பதிலாக இனி டெட்ரா பேக்கில் மது பானங்களை விற்பனை செய்யலாம் என்று ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.

தமிழகத்தில் மதுப்பிரியர்கள் மதுவை அருந்தி விட்டு மது பாட்டில்களை சாலையில் வீசி செல்வதன் மூலம் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் போன்ற பலர் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.இவற்றை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இந்த பாட்டில்களை மறுசுழற்சி செய்ய முடியும் என்பதால் இது விவசாயிகளுக்கு நன்மை அளிக்க கூடிய ஒன்றாகும்.இதனால் டெட்ரா பேக்கில் மது பானங்களை விற்பனை செய்ய இருப்பதாகவும் இதுகுறித்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் டாஸ்மாக் நுகர்வோர் மற்றும் தொழிலாளர்கள் பிரச்சனைகள் ஆய்வு செய்யப்பட்டும். விரைவில் இதற்கான தொழிற் கூட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.

தமிழக டாஸ்மாக் கடைகளில் 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே மது விற்பனை செய்ய முடியும். அதற்கு கீழ் உள்ளவர்கள் மது பானம் வாங்க வந்தால் அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்படும் என்றார்.

மேலும் மதுவால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு மறுவாழ்வு மையம் அமைக்க 15 இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக புகார் தொடர்ந்து வந்து கொண்டே உள்ளது. இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.