Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு நுழைவுச்சீட்டு இன்றுமுதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!! மாணவர்கள் மகிழ்ச்சி!!

#image_title

முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு நுழைவுச்சீட்டு இன்றுமுதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!! மாணவர்கள் மகிழ்ச்சி!!

முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இன்று முதல் மாணவர்கள் இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.

11ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர்களை மேற்படிப்பு படிக்க ஊக்கப்படுத்தும் வகையில் இத்தேர்வில் பங்கேற்று தேர்ச்சியடையும்  1000 மாணவர்களுக்கு இளங்கலை படிப்பு முடிக்கும் வரை மாத மாதம் 1000 ருபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

அக்டோபர் 10ம் தேதி நடக்கவிருக்கும் இந்த தேர்விற்கான நுழைவுச்சீட்டு இன்றும் மதியம் 3 மணி முதல் dge.tn.gov.in என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேலும் மாணவர்கள் தங்கள் பெயர், கடவுச்சொல்லை உள்ளீடு செய்து  நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவுசீட்டில் தங்களது பெயர், புகைப்படம், பதிவெண் போன்றவை சரியாக உள்ளதா என தேர்வுக்கு முன் ஒருமுறை சரிபார்த்து கொள்ளவும் அறிவுறுத்திக்கொள்ளப்படுகிறது.

Exit mobile version