மாணவர்களே ரெடியா!! தேர்வு அட்டவணையை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை!!
தமிழ்நாட்டில் கோடை வெயில் காரணமாக ஜூன் மாதம் ஒன்றாம் தேதி திறப்பதாக இருந்த அனைத்து பள்ளிகளும் ஜூன் பன்னிரெண்டாம் தேதி திறக்கப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது.
பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் பாடங்கள் அனைத்தும் வேகமாக நடத்தி முடிக்க ஆசிரியர்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மாணவர்களுக்கான தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்திற்கு உள்ளிட்ட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலத்துறை சிறப்பு பள்ளிகள் ஆகிய பள்ளிகளில் பயின்று வரும் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வைக்கக்கூடிய அனைத்து தேர்வுகளின் கால அட்டவணையையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
எனவே, வருகின்ற ஜூலை 21 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு முதல் அழகுத் தேர்வானது நடக்க உள்ளது.
மேலும், ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை ஆறாம் வகுப்பிலிருந்து 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவநிலை தேர்வானது நடக்க உள்ளது.
பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் அழகுத் தேர்வானது ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி துவங்கி செப்டம்பர் மாதம் நான்காம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த கல்வி ஆண்டிற்கான அனைத்து தேர்வு அட்டவணையையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. எனவே ஆசிரியர்கள் வேகமாக மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி தேர்விற்கு தயார் படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.