இன்று புத்தக பை இல்லாமல் மாணவர்கள் வருகை!! மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு!!
மாணவர்களின் நலன் கருதி மாநில அரசும் மத்திய அரசும் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.ஏழை எளிய மாணவர்களும் கல்வி கற்க வேண்டும் என்றும் அவர்களின் திறனும் மேம்பட வேண்டும் என்றும் பல திட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையிலும் அவர்களது ஆர்வத்தை தூண்டும் வகையிலும் புதிய திட்டத்தை பள்ளிகல்வித்துறை ஏற்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் இனி மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் மாணவர்களாக இல்லமால் கற்றல் திறன் அதிகமுள்ள மாணவர்களாக இருப்பார்கள் என்று கருதப்படுகின்றது.
ஒவ்வொரு மாணவர்களும் கிலோ கணக்கில் நோட்டு பாட புத்தகத்தையும் ,நோட்டு புத்தகத்தையும் சுமந்து செல்கின்றனர். இப்படி இருக்கும் மாணவர்கள் ஒரு நாளாவது புத்தக பை இல்லாமல் பள்ளிக்கு சென்று கற்றால் எப்படி இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் உத்திரபிரதேசம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் மாணவர்கள் புத்தக பை இன்றி பள்ளிக்கு சென்று உடல் ஆரோக்கியம் ,போதைபொருள் ஒழிப்பு ,போக்குவரத்து விதிகள் போன்ற பாடங்களை கற்று வருகின்றனர்.
தற்பொழுது புதுச்சேரி மாநிலத்திலும் மாணவர்கள் ஒவ்வொரு மாத கடைசியிலும் புத்தக பை இன்றி பள்ளிக்கு வரலாம் என்றும் அந்த நாள் புத்தக நாளாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுற்தப்பட்டுள்ளது. அப்படி அந்த மாதத்தின் கடைசி நாள் விடுமுறை நாளாக அமையம் பட்சத்தில் அதற்க்கு முன் தினம் no bag day என்று கடைபிடிக்க படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று மாதத்தின் இறுதி நாள் என்பதால் மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் மாணவர்கள் புத்தகம் இன்றி வரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று அனைத்து பள்ளிகளிலும் கைவினை பொருட்கள் செய்தல் ,விளையாட்டு போட்டிகள் ,கலை நிகழ்சிகள் போன்ற பல பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது.