மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சுப்மான் கில்!!! எப்பொழுது இந்திய அணியில் விளையாடுவார்!!? 

0
198
#image_title
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சுப்மான் கில்!!! எப்பொழுது இந்திய அணியில் விளையாடுவார்!!?
டெங்கு காய்ச்சல் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திய அணியின்  தொடக்க வீரர் சச்சின். கில் அவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அடுத்த போட்டியில் இந்திய அணிக்காக விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய சுப்மான் கில் அவர்கள் ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்று சிறப்பாக விளையாடினார். இதையடுத்து இந்த ஆண்டுக்கான உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றார். இந்நிலையில் இந்திய அணி விளையாடும் முதல் போட்டியில் சுப்மான் கில் அவர்கள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுப்மான் கில் அவர்களுக்கு எதிர்பாராத விதமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதன். காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாட முடியாமல் போனது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சுப்மான் கில் அவர்கள் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சுப்மான் கில் அவர்கள் முழுவதுமாக குணம் அடைந்ததால் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட வாய்ப்பு இல்லை என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
நாளை(அக்டோபர்11) நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் இந்தியா அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கின்றது. இந்நிலையில் சுப்மான் கில் அவர்கள் இன்று(அக்டோபர்10) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து நாளைய போட்டியை சுப்மான் கில் அவர்கள் விளையாடவில்லை என்றாலும் சனிக்கிழமை அதாவது அக்டோபர் 14ம் தேதி நடைபெறும் பாகிஸ்தான்அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் சுப்மான் கில் அவர்களின் உடல்நிலை குணமடையாத நிலையில் ருத்ராஜ் கெய்க்வாட் அல்லது ஜெய்சிவால் இருவரில் ஒருவரை இந்திய அணியில் சேர்க்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.