பள்ளிகளுக்கு வெளிவந்த திடீர் அறிவிப்பு!! இனி இப்படிதான் கையெழுத்து!!

0
76
Sudden announcement for schools!! This is the signature from now on!!

பள்ளிகளுக்கு வெளிவந்த திடீர் அறிவிப்பு!! இனி இப்படிதான் கையெழுத்து!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

எனவே, ஜூன் மாதம் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறப்பதாக இருந்த நிலை மாறி, ஜூன் பன்னிரெண்டாம் தேதி ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலும் ஜூன் 14  ஆம் தேதி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது  நடைபெற்று வருகிறது.

பள்ளிகள் திறக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை தமிழக அரசானது ஏராளமான சலுகைகளையும், அறிவிப்புகளையும்  மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்கி வருகிறது.

மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் மற்றும் பள்ளிகளில் வாரந்தோறும் மாணவர்களுக்கு கருத்தரங்கம் என்று பல அறிவிப்புகளை பள்ளிகல்வித்துறை தினமும் அறிவித்து வந்தது.

அந்த வகையில், தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் வெளியிட்டுள்ளது. அதாவது, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அனைவரும் இனிமேல் தமிழில் தான் கையெழுத்து போடா வேண்டும் என்று அறிவித்துள்ளது.

இதற்கான அரசாணை கடந்த 2021  ஆம் ஆண்டு வெளிவந்த நிலையில், தற்போது பள்ளிகளில் உள்ள ஆவணங்கள், வருகைப்பதிவு என அனைத்திலுமே மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருமே இனி தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும் என்று பள்ளிகல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதை அனைத்து பள்ளிகளிலும் விரைவாக கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மாணவர்களிடம் தமிழை வளர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.