பொறியியல் கலந்தாய்வில் திடீர் தாமதம்!! மாணவர்களுக்கு வெளியான செய்தி!!
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு நடந்து முடிந்து அதற்கான முடிவுகளும் வெளியிடப்பட்டது. எனவே மாணவ, மாணவிகள் அனைவரும் நிறையத் துறைகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
அந்த வகையில் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ், 450 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையானது கலந்தாய்வு அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டிற்கான அரசு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் சேர்வதற்கு ஆன்லைன் விண்ணப்பதிவு மே 5 ஆம் தேதி துவங்கிய நிலையில் ஜூன் 4 ஆம் தேதி நிறைவு பெற்றது.
அந்த வகையில், 1,78,959 பேருக்கு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு நேற்று பொறியியல் கலந்தாய்விற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. எனவே உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இது சம்மந்தமாக கூறி இருப்பது, பொறியியல் படிப்பை படிக்க மொத்தம் 2,29,175 பேர் பதிவு செய்துள்ளனர்.
அதில், 1,87,847 மாணவர்கள் பதிவுக்கட்டணம் செலுத்தி உள்ள நிலையில், 1 லட்சத்து 78 ஆயிரத்து 959 மாணவர்கள் இதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்தாலும் மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு இன்னும் தொடங்கவில்லை.
பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்து கட் ஆப் அதிகமாக வைத்திருக்கும் மாணவர்கள் மருத்துவம் படிக்க விரும்புகின்றனர். எனவே இந்த பொறியியல் கலந்தாய்வு உடனடியாக நடைபெற்றால் பாதியில் பொறியியல் படிப்பை நிறுத்தி விட்டு மருத்துவம் பயில மாணவர்கள் சேர்ந்து விடுவார்கள்.
ஆகையால், மருத்துவக் கலந்தாய்வு நடந்து முடிந்து சில நாட்களில் பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறி உள்ளார்.