பதிவுக்கட்டணம் திடீர் உயர்வு!! இனி அடுக்குமாடி குடியிருப்பு விலையும் அதிகமாகுமா??
தமிழகத்தில் அடுக்குமாடி கட்டிடத்திற்கான கட்டணம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. ஆனால் தற்போது புதிய பதிவு கட்டணத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.
அந்த வகையில் தற்போது ஒன்பது சதவிகிதம் தனிப்பதிவு கட்டணம் விதிக்கப்பட்டு நடைமுறைக்கும் வந்துள்ளது. ஒருவர் கட்டுமான நிறுவனத்திடம் இருந்து அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி அதை பதிவு செய்யும் போது,
விற்பனை பத்திரத்திற்கான மொத்த தொகையில் தனியாக ஒன்பது சதவிகிதத்தை பதிவு கட்டணமாக வழங்க வேண்டும். மேலும், கட்டுமான ஒப்பந்த என்ற பெயரில் தனியாக நான்கு சதவிகிதத்தை கட்டணமாக செலுத்த வேண்டும்.
இந்த புதிய கட்டண முறையை உடனடியாக அனைத்து அலுவலகங்களிலும் செயல்படுத்த வேண்டும் என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் நிர்ம்லாசாமி பத்துவுத்துறை ஐஜிக்கு அறிவுறுத்தி உள்ளார்.
மேலும், இவர் அடுக்குமாடி குடியிருப்பு பதிவு கட்டணத்தில் நடைபெறும் சீர்கேடுகளை தடுக்கும் விதமாக இந்த தனிப்பதிவு கட்டணம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறி உள்ளார்.
இந்த புதிய முறை உடனடியாக தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது. எனவே, குடியிருப்புகளின் விலை உயர வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்படுகிறது.
அதாவது ஒரு அப்பார்ட்மென்ட்டை ஐம்பது லட்சத்திற்கு வாங்குகிறோம் என்றால், அதன் விற்பனை பத்திர கட்டணம் என்ற பெயரில் ஒன்பது சதவிகிதம் மற்றும் கட்டுமான கட்டணம் நான்கு சதவிகிதம் என மொத்தம் 2.35 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டி இருக்கும்.
ஆனால் தற்போது தனிப்பதிவு கட்டணம் உயர்த்தப் பட்டதால் மொத்த விலையில் ஒன்பது சதவிகித கட்டணம் கூடுதலாக செலுத்த வேண்டி இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த புதிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.