Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர் திடீர் ஒய்வு

இயன் பெல் இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர். இவர் அந்த அணிக்காக 118 டெஸ்ட், 161 ஒருநாள் மற்றும் 8 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 7,725 ரன்களும், ஒருநாள் போட்டியில் 5,416 ரன்களும் அடித்தார். டெஸ்ட் போட்டியில் 22 சதங்களும் 46 அரைசதங்களும், ஒருநாள் போட்டியில் நான்கு சதங்களும், 35 அரைசதங்களும் அடித்துள்ளார்.
இந்த நிலையில் இவருக்கு கடந்த ஐந்து வருடமாக இங்கிலாந்து அணியில்  இடம் கிடைக்காததால் கவுன்ட்டி போட்டியிலும் மட்டும் விளையாடி வந்துள்ளார். நேற்று கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்தார். இந்திய மண்ணில் இங்கிலாந்து அணி  தொடரை வெல்லும்போது அணியில் ஒரு சாதாரண வீரராக இருந்தார் ஆனால் 2013 -ல்  நடந்த ஆஷஸ் தொடரில் தொடர் நாயகன் விருதை பெற்றார்.
Exit mobile version