தினேஷ் கார்த்திக்கா? ரிஷப் பண்ட்டா?… யாருக்கு இடம் கொடுக்க வேண்டும் என கவாஸ்கர் கருத்து!

0
155

தினேஷ் கார்த்திக்கா? ரிஷப் பண்ட்டா?… யாருக்கு இடம் கொடுக்க வேண்டும் என கவாஸ்கர் கருத்து!

இந்திய அணியில் ஆறாவது வீரராக யாரைக் களமிறக்குவது என்ற குழப்பம் நீடித்து வருகிறது.

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் ஆடும் லெவனில் ரிஷப் பண்ட் அல்லது தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் யாரை அணியில் எடுப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபகாலமாக பினிஷிங் ரோலில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆனால் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா “ரிஷப் பண்ட்டை அணியில் இணைப்பதுதான் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் அணியில் முதல் ஐந்து வீரர்களில் இடது கை ஆட்டக்காரர்களே இல்லை. அதனால் ரிஷப் பண்ட் பொறுத்தமான வீரராக இருப்பார்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில்  கவாஸ்கர் “இந்திய அணியில் ரிஷப் பண்ட் போன்ற ஒரு திறமையான இடதுகை பேட்ஸ்மேன் இருக்கும்போது நீங்கள் அவரைதான் அணியில் எடுக்க வேண்டும். ஏனென்றால் இடதுகை பேட்ஸ்மேன் இருந்தால்தான் எதிரணி பந்துவீச்சாளர் குழம்புவார். கேப்டனும் அனைத்து டிகிரியிலும் பீல்டர்களை நிறுத்தி குழம்பிவிடுவார். இடது கை பேட்ஸ்மேன் அணியில் இருப்பது கூடுதல் பலமாக அமையும்” எனக் கூறியுள்ளார்.

அக்டோபர் 23 ஆம் தேதி நடக்க உள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இந்த தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக அமைந்துள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. கடந்த ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி வீழ்த்தியதால் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு செல்ல முடியாமல் போனது.