ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் நியூஸ்!! இன்று முதல் விற்பனைக்கு!!
தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் காய்கறிகளின் விலை மற்றும் மளிகை பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் பெரும் இக்கட்டில் சிக்கி வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது உயர்ந்து வரும் இந்த உணவுப்பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு ஒவ்வொரு மாதமும் பத்து ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் உளுத்தம் பருப்பை வழங்குவதற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்.
மளிகை பொருட்களின் விலை உயர்ந்து வருவதால் மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக உள்நாட்டு சந்தைகளில் அவற்றை இறக்குமதி செய்வதற்கான முயற்சிகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் கோரிக்கை எழுப்பியுள்ளார்.
அந்த வகையில், இது குறித்து உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது, இந்த விலைவாசி உயர்வை குறைக்க ரூபாய் 928 கோடி மதிப்பிலான பாமாயில் மற்றும் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கூறி உள்ளார்.
தமிழகத்தில் இந்த விலைவாசி உயர்வைக் குறைக்க, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்குத் தேவையான 40,000 மெ.டன். துவரம் பருப்பு ரூபாய் 464.79 கோடிக்கும்,
மேலும் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்குத் தேவையான மொத்தம் 5.10 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் 463.48 கோடி ரூபாய்க்கும் என ஒட்டு மொத்தமாக ரூபாய் 928.27 கோடி மதிப்பில் கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துவரம் பருப்பு மற்றும் பாமாயில் முதலியவை அனைத்து மண்டல கிடங்குகளிலும் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த கிடங்குகளில் இருந்து நியாய விலை கடைகளுக்கு பொருட்கள் மாற்றப்பட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும்.
காய்கறிகளில் தக்காளியின் விலை உச்சம் தொட்டு வருவதனால் ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூபாய் 60 –ற்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், துவரம் பருப்பு அரை கிலோ 75 ரூபாய்க்கும், அதேப்போல உளுத்தம் பருப்பு அரை கிலோ 60 ரூபாய்க்கும் இன்று முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது.