பழனி செல்லும் பக்தர்களுக்கு வெளியான சூப்பர் நியூஸ்!! இனி நீண்ட நேரம் நிற்க தேவை இல்லை!!
தமிழ் கடவுள் என்று அழைக்கப்படும் கடவுள் தான் முருகர். இவரின் அறுபடை வீடுகளில் ஒன்று தான் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி ஆகும்.
இங்கு ஒவ்வொரு நாளும் முருகனை தரிசிக்க கோடிக்கணக்கான மக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். மேலும், பழனி கோவிலுக்கு தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல், வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.
இங்கு தைப்பூசம், போன்ற முருகருக்கு உகந்த நாட்களில் கூட்டம் அலைமோதும் என்பது குறிப்பிடத்தக்கது. தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பொது தரிசனம், பத்து ரூபாய் கட்டணம் மற்றும்
நூறு ரூபாய் கட்டணத்தில் தரிசனமும் செய்து வருகின்றனர். இந்த நூறு ரூபாய் கட்டணத்தில் செல்லும் பக்தர்கள் தரிசன நேரம் வரும்வரை காத்திருக்கும் அறையில் சிறிது நேரம் தங்கி செல்கின்றனர்.
இந்த காத்திருக்கும் அறையில் இருக்கைகள், எல்.இ.டி. தொலைகாட்சி, மற்றும் மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளது. மற்றும் பத்து ரூபாய் தரிசன கட்டணத்தில் செல்லும் பக்தர்களுக்கு காத்திருக்கும் அறையில் ஆயிரம் இருக்கைகள் வசதிகள் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்டது.
ஆனால் பொது தரிசனம் பார்க்க செல்லும் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதால், பெரியவர்கள் குழந்தைகள் பெண்கள் அனைவரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே, பொது தரிசனம் செய்யும் மக்களுக்காக இருக்கை வசதிகள் அமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அங்குள்ள நாயக்கர் மண்டபத்தில் ரூபாய் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் செலவில் 210 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இங்கு பக்தர்களுக்காக குடிநீர் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. இந்த முடிவால் பொது தரிசனம் செய்யும் பக்தர்கள் இனி நீண்ட நேரத்திற்கு நிற்க வேண்டிய அவசியமே இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.