இந்திய பெருங்கடலில் பயங்கர வெப்பமண்டல சூறாவளி புயல் – சர்வதேச விண்வெளி மையம் அதிர்ச்சி தகவல்

0
342
#image_title

இந்திய பெருங்கடலில் பயங்கர வெப்பமண்டல சூறாவளி புயல் – சர்வதேச விண்வெளி மையம் அதிர்ச்சி தகவல்

இந்திய பெருங்கடலில் அதி தீவிர வெப்பமண்டல சூறாவளி உருவாகியிருக்கிறது என்று சர்வதேச விண்வெளி மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்திய பெருங்கடலில் வெப்பமண்டல சூறாவளி உருவாகியிருப்பதாக சர்வதேச விண்வெளி மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த புயல் இந்தியப் பெருங்கடல் தீவான மொரிஷியசை நோக்கிச் செல்கிறது. இந்த புயல் காற்று இன்று மொரிஷியசை தாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சூறாவளியால் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும், மொரிஷியஸ் தீவு நேரடி அச்சுறுத்தலை சந்திக்கவுள்ளதாகவும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சூறாவளி புயல் பயங்கரமான சூறாவளியாக தாக்கும் எனவும் கனமழை மற்றும் வெள்ளம் ஏற்படும் அபயாம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென் ஆப்பிரிக்கா, மலாவி, ஜாம்பியா, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளும் உச்சகட்ட தயார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.