பாரம்பரிய விதைகளை சேகரித்து பயன்படுத்தும் விவசாயிகளுக்கு உதவித்தொகை!! தமிழக வேளாண் துறை அறிவிப்பு!!
இந்தியா முழுவதும் உள்ள அதிகபடியான விவசாயிகள் தாங்கள் பயிர் செய்யும் இடத்திற்கு மற்றும் பயிர்களுக்கு அதிக அளவில் செயற்கை உரங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு பயன்படுத்தும் உரங்கள் மற்றும் ஹைப்ரிட் விதைகள் பயன்படுத்துவதால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்பதால் பெரும்பாலும் விவசாயிகள் இதனையே பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனாலும் இந்த காலக்கட்டத்தில் கூட இயற்கை விவசாயத்தை செய்யும் விவசாயிகளும் பலர் உள்ளனர். இந்த ஹைப்ரிட் விதைகளுக்கு பதிலாக பராபரிய விதைகளை பயன்படுத்தினால் விளைச்சல் குறைவாக இருக்கும் என்பதை எண்ணி விவசாயிகள் பெரிதும் பாரம்பரிய விதைகளை பயன்படுத்துவது இல்லை.
இப்படியான மாற்று விவசாய முறையால் பாரம்பரிய விதைகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது.அதிலும் குறிப்பாக நெல் விதைகள் என்பது தமிழகத்தில் ஒரு சில இடங்களில் தான் காணப்படுகின்றது.
பாரம்பரிய விதைகளை பயிரிடும் விவசாயிகளை உக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு உதவித்தொகை வழங்க தமிழக வேளாண் துறை முடிவு செய்துள்ளது.
இதனை நிறைவேற்றும் விதாமாக மாநிலம் முழுவதும் உள்ள 10 தகுதியுடைய விவசாயிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ரூ.3 லட்சம் உதவித்தொகை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கு விண்ணப்பிக்கும் விவசாயிகள் குறைந்தது 100 விதைகளை பயிரிட்டு உற்பத்தி செய்து பாரம்பரிய விதைகளாக பராமரிக்க வேண்டும்.
இப்படி பயிரிடும் பொழுது அதில் கிடைக்க கூடிய விளைச்சலை மட்டும் உற்பத்தி செய்தால் போதும் மேலும் தேவைபட்டால் இயற்கை உரங்களை பயன்படுத்தலாம் ஆனால் ஒரு பொழுதும் செயற்கை உரங்களை பயன்படுத்த கூடாது.அதன்படி எந்த வித புச்சுகொல்லி மருந்து ,வேதிபொருட்கள் போன்ற எவற்றையும் பயன்படுத்த கூடாது.