Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

“பாபர் அசாம் சிறந்த பேட்ஸ்மேன் & கேப்டன்தான்… ஆனா?” – இளம் வீரரை நம்பும் சுரேஷ் ரெய்னா!

“பாபர் அசாம் சிறந்த பேட்ஸ்மேன் & கேப்டன்தான்… ஆனா?” – இளம் வீரரை நம்பும் சுரேஷ் ரெய்னா!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நாளை மறுநாள் மெல்போர்னில் நடக்க உள்ளது.

வரும் 23 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மெல்போர்னில் நடக்க உள்ளது. இந்த தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக இந்த போட்டி உள்ளது. போட்டி நடக்கும் நாளில் மழை பெய்ய 80 சதவீத வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த போட்டிக்காக இந்திய அணிக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர். அதில் “பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பலமாக உள்ளது. 140 கி மீ வேகத்துக்கு வீசும் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளார்கள். மற்ற அணிகளில் இப்படி ஒரு அசுரக் கூட்டணி இல்லை.

ஆனால் பாகிஸ்தானின் பேட்டிங் அவ்வளவு பலமாக இல்லை. மிடில் ஆர்டரில் யாரும் சிறப்பாக விளையாடுவதில்லை. அதனால் பாபர் ஆசாம் விக்கெட்டை சீக்கிரம் வீழ்த்த வேண்டும். அவர்களின் இந்த பலவீனத்தைப் பயன்படுத்த வேண்டும். ஆஸ்திரேலிய மைதானங்களில் சிக்ஸ் எல்லை அதிகம் என்பதால் ஷாட் பிட்ச் பந்துகளை வீசி விக்கெட்களை வீழ்த்த முயற்சிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

கவுதம் கம்பீர் சொல்வது போல கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தான் அணியின் பேட்டிங் தூண்களாக பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோரே உள்ளனர். இந்நிலையில் இப்போது சுரேஷ் ரெய்னா “பாபர் அசாம் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் சிறந்த கேப்டன் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இந்த முறை அவரின் விக்கெட்டை மிக விரைவாகவே இந்திய பவுலர் அர்ஷ்தீப் சிங் கைப்பற்றுவார் என்று நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார். இந்திய அணியில் பூம்ரா இல்லாத நிலையில் அர்ஷ்தீப் மற்றும் முகமது ஷமி கூட்டணி மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

Exit mobile version