“தினேஷ் கார்த்திக்கால் எனது இடத்துக்கு ஆபத்து வந்துவிடும் போல…” சூர்யகுமார் யாதவ் ஜாலி!

0
174

“தினேஷ் கார்த்திக்கால் எனது இடத்துக்கு ஆபத்து வந்துவிடும் போல…” சூர்யகுமார் யாதவ் ஜாலி!

தினேஷ் கார்த்திக் நேற்றைய போட்டியில் நான்காவது வீரராக களமிறக்கப்பட்டார்.

நேற்றைய இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 227 ரன்கள் சேர்த்தது.

அந்த அணியின் ரைலே ரோஸோ அபாரமாக விளையாடி 47 பந்துகளில் சதம் அடித்து கலக்கினார். மற்றொரு வீரரான குயிண்டன் டிகாக் அவருக்கு உதவியாக அரைசதம் அடித்தார். இந்திய பந்துவீச்சாளர்கள் யாருடைய பந்துவீச்சும் நேற்று எடுபடவில்லை. குறிப்பாக ஹர்ஷல் படேல் மற்றும் அஸ்வின் ஆகியோர் ஓவர்களை தென் ஆப்பிரிக்க வீரர்கள் வெளுத்து வாங்கினர்.

இந்நிலையில் இந்திய அணியில் நேற்று நிறைய மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையில் தினேஷ் கார்த்திக் வழக்கமாக சூர்யகுமார் யாதவ் இறங்கும் நான்காம் இடத்தில் இறக்கப்பட்டார். அந்த இடத்தில் அதிரடியாக விளையாடிய அவர் 21 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரே நேற்றைய போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் எடுத்த வீரராக இருந்தார்.

இந்நிலையில் தொடர் நாயகன் விருது பெற்ற சூர்யகுமார் யாதவ் “நான் ஆட்டத்தை என்ஜாய் செய்து விளையாடவே விரும்புகிறேன். எந்த இடத்தில் இறங்கினாலும். தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடினார். அவரின் ஆட்டத்தால் என்னுடைய நான்காவது இடத்துக்கு இப்போது பிரச்சனைகள் எழுந்துவிடும் போல இருக்கிறது.” எனக் கூறியுள்ளார்.