சர்வதேச சாதனை பட்டியலில் ரோகித் மற்றும் கோலியை தொடர்ந்து அதிரடியாக இடம் பிடித்த சூரியகுமார் யாதவ்!!
தற்போது நடைபெற்ற டி20 கிரிக்கெட்டில் சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் புதியதொரு சாதனை பட்டியலில் சூரியகுமார் யாதவ் பெயரும் இடம் பெற்றுள்ளது.
இந்தி கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் இல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்தப் போட்டிகளில் முதல் இரண்டு போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றது.
நேற்றைய 3-வது ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்கள் முடிவில் 159 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 வீழ்த்தி இருந்தார். இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, ஆகியோரின் அதிரடியான பேட்டிங் மூலம் வெற்றியை ருசித்தது.
இந்த ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் சூரியகுமார் யாதவ் இந்த ஆட்டத்தில் 44 பந்தில் அவர் 83 ரன்கள் அடித்தார். இதில் 10 பவுன்டரி 4 சிக்ஸர் அடங்கும் . சூரியகுமார் இந்த ஆட்டத்தில் 4 சிக்ஸர் அடித்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 100 சிக்ஸர்கள் அடித்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை பட்டியலில் இணைந்தார்.
இந்த பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் முறையே ரோகித் சர்மா 182 சிக்ஸர், விராட் கோலி 117 சிக்ஸர் உள்ளனர். அடுத்து சூரியகுமார் யாதவ் 101 சிக்ஸர் அடித்து மூன்றாவது இடத்திலும், கே.எல் ராகுல் 99 சிக்சர் அடித்து நான்காவது இடத்திலும் உள்ளனர்.