பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் நிறுத்திவைப்பு!! அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு!!
அண்ணா பல்கலைக்கழகமானது தற்போது தமிழகத்தில் எண்பது பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது. அதாவது இந்த கல்லூரிகளில் தேவையான அளவு கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் திடீரென இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
தமிழகத்தில் உள்ள எண்பது பொறியியல் கல்லூரிகளை அண்ணா பல்கலைக்கழகம் நேரும் சென்று ஆய்வு மேற்கொண்டது. அதில், போதுமான கட்டிட வசதிகள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் அவர்களுக்கு தொடர் அங்கீகாரத்தை நிறுத்தி வைத்துள்ளதாக கூறி உள்ளது.
மேலும், கட்டமைப்பு வசதிகளை உடனடியாக சரி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, கல்லூரியை முழுவதுமாக சரி செய்த பின்னர் அனைத்தையும் ஆய்வு செய்த பிறகே அங்கீகாரம் வழங்கப்படும் என்று அதிரடியாக கூறி உள்ளது.
மேலும், அனைத்து கல்லூரிகளிலும் உள்ள மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் எண்ணிக்கை, கல்லூரியில் உள்ள ஆய்வகங்களில் போதுமான செய்முறை வசதிகள் உள்ளதா, நூலகம் மற்றும் மாணவர்களுக்கு குடிநீர் வசதிகள், கல்லூரியின் கட்டிட வசதிகள் என அனைத்தும் கட்டாயமாக ஆய்வு செய்யப்படும்.
இவ்வாறு ஆய்வு செய்த பின்னரே அனைத்து கல்லூரிகளுக்கும் அங்கீகாரம் வழங்கப்படும் என்று அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது. மேலும், போதுமான வசதிகள் இல்லாத கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் கட்டமைப்பு சிறப்பாக உள்ள கல்லூரிகளுக்கு மாற்றப்படுவார்கள் என்றும் அண்ணா பல்கலைகழகம் கூறி உள்ளது.
இந்த திடீர் முடிவால் எண்பது கல்லூரிகளும் உடனடியாக பணியை செய்ய தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.