T20 IND vs ZIM: ரிவெஞ் கொடுக்க அதிரடியாக களமிறங்கும் ஜிம்பாப்வே.. வெற்றியை தக்கவைக்க முயற்சிக்குமா இந்தியா!!
இந்திய அணி டி-20 உலககோப்பை வென்ற பிறகு தற்போது ஜிம்பாப்வே-ல் சுற்றுப்பயணம் மேற்க்கொண்டுள்ளது. இதில் முதலில் நடந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்த அணியின் கேப்டன் சிகந்தர் ரஜா அவர்கள் அணியை சிறப்பாக வழிநடத்தினார். அதன் பின் நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி பழிதீர்க்கும் வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
அப்போட்டியில் அபிஷேக் ஷர்மா தனது அதிரடியான ஆட்டத்தால் சதம் விளாசினார் மற்றொரு புறம் ருதுராஜின் சிறப்பான ஆட்டத்தால் 77 ரன்களை குவித்தார். இதில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-1 என்ற சமநிலையில் இரு அணிகளும் உள்ளன.
இன்று நடக்கும் 3வது போட்டி இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு ஹராரவில் நடைபெறுகிறது. இதில் கேப்டன் கில் தலைமையில் இந்திய அணியும் சிகந்தர் ரஜா தலைமையில் ஜிம்பாப்வே அணியும் களமிறங்குகின்றன. இந்திய அணி பொருத்த வரை பேட்டிங்கில் அபிஷேக் ஷர்மா, ருதுராஜ், ரிங்கு சிங் ஆகியயோர் நல்ல பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் ரவி பிஸ்னாய், முகேஷ்குமார், ஆவேஸ் கான் போன்றோர் சிறப்பாக பந்து வீசுகின்றனர். தற்போது சிவம் துபே, சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளதால் தற்போது அணியில் யாரை சேர்ப்பது யாரை நீக்குவது என்ற குழப்பம் நீடிக்கிறது.
ஜிம்பாப்வே அணியில் பென்னட், முசர்பானி, சத்தாரா, சிகந்தர் ரசா ஆகியோர் சிறப்பாக பந்து வீசினால் இந்திய அணிக்கு நெருக்கடி தர முடியும். இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணி வெற்றியை தொடருமா அல்லது ஜிம்பாப்வே அணி தோல்விக்கு பலி தீர்க்குமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.