இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: சிறந்த பீல்டர் விருதை வென்ற இந்திய வீரர் யார் தெரியுமா..?

Photo of author

By Anand

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: சிறந்த பீல்டர் விருதை வென்ற இந்திய வீரர் யார் தெரியுமா..?

Anand

Updated on:

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியுடன் விளையாடியது. இதில் இந்திய அணியானது 4 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இம்பேக்ட் பீல்டர் விருது:

வழக்கமாக ஒவ்வொரு தொடரிலும் பீல்டிங் துறையில் சிறந்து விளங்கும் இந்திய வீரருக்கு பி.சி.சி.ஐ. சார்பில் ‘இம்பேக்ட் பீல்டர்’ விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

அந்த வகையில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரின் சிறந்த பீல்டராக துருவ் ஜுரெல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு இந்த விருதை இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் வழங்கி கவுரவித்தார்.