Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டி20 உலகக் கோப்பை தொடர்! இன்று தொடங்கும் சூப்பர் 12 ஆட்டங்கள்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி ஆரம்பமான t20 உலகக் கோப்பை தொடரின் தகுதி சுற்று போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்து இருக்கின்றன. இன்றைய தினம் சூப்பர் 12 சுற்றுக்கான போட்டிகள் ஆரம்பமாக இருக்கின்றன.

தகுதிச்சுற்றில் வங்கதேசம், அயர்லாந்து, இலங்கை, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, பாப்புவா, ஓமன், நியூகினியா, உள்ளிட்ட 8 நாடுகள் பங்கேற்கின்றன. தகுதி சுற்று போட்டியில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் உலகக் கோப்பை டி20 போட்டியில் விளையாடுவதற்காக தகுதியை பெறும் அணிகளாக இருக்கும். அந்த விதத்தில் ஸ்காட்லாந்து, வங்காளதேசம் இலங்கை மற்றும் நமீபியா உள்ளிட்ட அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கின்றனர். இதில் நமீபியா அணி முதல் முறையாக டி20 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்து இருப்பதாக தெரிகிறது.

இப்படியான சூழ்நிலையில், இன்றைய தினம் சூப்பர் 12 சுற்றுக்கான போட்டிகள் ஆரம்பமாக இருக்கின்றன. மாலை 3 .30 மணி அளவில் ஆரம்பமாகும் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் தென்ஆப்பிரிக்கா அணி மோதுகின்றது இரவு 7 .30 மணி அளவில் ஆரம்பமாகும் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மேற்கிந்திய தீவுகள் அணி மோத இருக்கிறது.

நாளைய தினம் மாலை 3 .30 மணி அளவில் ஆரம்பமாகும் போட்டியில் இலங்கை அணியும், வங்காளதேச அணியும் சந்திக்கின்றன. இரவு 7 .30 மணி அளவில் ஆரம்பமாகும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேருக்குநேர் சந்திக்கின்றன. நவம்பர் மாதம் 14ஆம் தேதி வரையில் நடைபெறும் இந்த போட்டிகளை காண்பதற்கு 70 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

Exit mobile version