Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இறுதி சுற்றுக்கு முன்னனேற்றம்!!!

#image_title

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி டி20 இறுதிச் சுற்றுக்கு முன்னேறி தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்தை உறுதி செய்துள்ளது.முதல் அறையிறுதிச்சுற்றில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸெஜியாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த வங்கதேசம் 17.5 ஓவரில் 51 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

வங்க அணி தலைவியான நிகர் சுல்தானா 12 ரன் எடுத்திருந்த நிலையில் தோற்று அணி திரும்பினார்.இவருக்கு பிறகு களமிறங்கிய வீராங்கனைகளும் சொற்ப ரன் வித்தியாசத்தில் தோற்ற நிலையில்.ஆரம்ப வீராங்கனைகளாக களமிறங்கிய ஷாதி ராணி,ஷமீமா சுல்தானா இருவரும் ஆடிய முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட் ஆனார்கள்.இதனைத் தொடர்ந்து வங்க அணியில் மொத்தம் 5 பேர் டக் அவுட் ஆகினர் இதனையடுத்து வங்க அணி அரையிறுதிச்சுற்றில் தோற்றது.

இந்நிலையில் வங்க தேசத்துடன் நடந்த அறையிறுதிச்சுற்றில் அபார வெற்ற இந்திய பெண்கள் கிரிகெட் அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.ஹாங்சோ நகரில் இன்று காலை 11:30 இந்திய இலங்கை அணி இறுதி சுற்றில் மோதவுள்ளது.

Exit mobile version