Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டி20 உலக கோப்பை- இன்று அறிவிக்கப்படுகிறதா? இந்திய அணி

டி20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ஆம் தேதி முதல் நவம்பர் 14-ஆம் தேதி வரை ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் நடக்கிறது. இதற்கான 15 பேர் கொண்ட அணிப்பட்டியலை வருகிற 10-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கெடு விதித்துள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன.

இந்த நிலையில் இந்திய அணி இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சேத்தன் ஷர்மா தலைமையிலான இந்திய தேர்வு கமிட்டியினர் இங்கிலாந்தில் உள்ள கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோருடன் கலந்து ஆலோசித்து அணியை இறுதி செய்கிறார்கள். விரல் காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், நடராஜன் ஆகியோருக்கு அணியில் இடம் கிடைப்பது சந்தேகம் என்று சொல்லப்படுகிறது.

இதனால் வருண் சக்ரவர்த்தி, ராகுல் சாஹர் ஆகியோரில் ஒருவர் பெயர் பரிசீலிக்கப்படும் என தெரிகிறது. அதேபோல் கடந்த சில வருடங்களாக டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுவரும் சூர்ய குமார் யாதவ் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. ரிசப் பண்ட், ஷர்துல் தாக்குர் ஆகியொருக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Exit mobile version