Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழக அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!! 15 பேர் படுகாயம்!!

Tamil Nadu government bus overturned in a ditch accident!! 15 people were injured!!

Tamil Nadu government bus overturned in a ditch accident!! 15 people were injured!!

தமிழக அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!! 15 பேர் படுகாயம்!!

விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் அருகே அரசு பேருந்து ஒன்று சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளனதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

தமிழக அரசு பேருந்து ஒன்று நாகப்பட்டினத்தில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது.இந்த பேருந்தில் பல்வேறு பகுதியை சேர்ந்த 27 பயணிகள் பயணித்துள்ளார்கள்.

கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து பேருந்து வழக்கம் போல் புறப்பட்டது.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் என்ற பகுதியில் பேருந்து திடீரென்று  ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விட்டது.

பின்பு சாலையோரம் இருந்த 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த சம்பவம் அதிகாலை நடைபெற்றதால் இதில் தூங்கி கொண்டிருந்த 27 பயணிகள் பதற்றம் அடைந்தனர்.

இதனால் அப்பகுதி மக்கள் விரைந்து வந்து விபத்துக்குள்ளான பேருந்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இது குறித்த தகவல் மரக்காணம் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த பயணிகளை மீட்டனர்.அதில் பலர் பலத்த காயம் அடைந்து மயங்கிய நிலையில் இருந்தனர்.

இந்த சம்பவத்தில்  காயமடைந்த 15 பேரை மரக்காணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் மரக்காணம் அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை வழங்கபட்டு வருகின்றது. பின்பு இதனை தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version