மணிப்பூருக்கு உதவி பொருட்களை அனுப்ப தமிழக அரசு முடிவு!! முதல்வர் ஸ்டாலினின் அடுத்த கட்ட நடவடிக்கை!!

0
115
Tamil Nadu government decides to send relief goods to Manipur!! Chief Minister Stalin's next move!!

மணிப்பூருக்கு உதவி பொருட்களை அனுப்ப தமிழக அரசு முடிவு!! முதல்வர் ஸ்டாலினின் அடுத்த கட்ட நடவடிக்கை!!

மணிப்பூரில் இரண்டு பழங்குடியினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. அங்கு இன்னும் வன்முறையானது முடிவுக்கு வரவில்லை. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக வீதிகளில் அழைத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது.

இந்த கும்பல் அந்தப் பெண்கள் இருவரையும் வயல்வெளியில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து விட்டதாக செய்திகள் வந்தது. இந்த சம்பத்திற்கு பெண்களும், கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் உள்ள மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகின்றது. மேலும் மணிப்பூர் மாநில அரசுக்கு முதல்வர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அதில்  தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் சம்பவத்தில் பாதிக்கபட்டு முகாம்களில் தங்கி உள்ள மக்களுக்கு அதியவாசியா பொருட்களை அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் மணிப்பூர் மாநில அரசுக்கு முதல்வர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.இதனை தமிழக மக்கள் பலர் ஆதரவு அளித்து வருகின்றனர்.அதில் 50000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகாம்களில் தங்கி வைக்கப்பட்டுள்ளனர்.

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு அதிகரித்துள்ள இந்த நிலையில் முதல்வரின் இந்த உதவி அந்த மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது. மேலும் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவியாக இருக்கும்  வகையில் படுகைகள் ,கொசுவலைகள் ,மருந்து பொருட்கள் ,சானிட்டரி நாப்கின்கள் ,பால் பவுடர் போன்ற பொருட்களை வழங்கவும் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் மனிதாபிமான உதவிகளை வழங்க தமிழக அரசு தயாராக உள்ளதாக அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டார்.