மத்திய அரசிடம் கோரிக்கை எழுப்பிய தமிழக அரசு!! இனி விலைவாசி குறைய போகின்றது!!
தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கின்றது.இந்த விலை உயர்வால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றது.
பொதுமக்கள் இந்த விலை உயர்வால் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகின்றது.இந்த விலை உயர்வை குறைக்கும் விதமாக அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
விலை உயர்வை கட்டுபடுத்தும் விதமாக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசிடம் சில வேண்டுகோள்களை முன் வைத்துள்ளார்.அதன்படி இந்தியாவில் இப்பொழுது சில்லறை பண வீக்கம் அதிகரித்துள்ளது.அதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டு செல்கின்றது.
இந்த விலைவாசி உயர்வை கட்டுபடுத்த தமிழக அரசானது மத்திய அரசிடம் கையிருப்பில் உள்ள பத்தாயிரம் டன் கோதுமையை மற்றும் அரிசியை தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் என்று கூறி வருகின்றது.
மத்திய அரசிடமிருந்து பெறப்படும் கோதுமைகளை ரேஷன் கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றதால் சாமானிய மக்களின் வாழ்க்கை பாதிக்க படுவதாக இதனை குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய உணவுத்துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு எழுதி உள்ள கடித்தத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
அந்த கடிதத்தில் மத்திய அரசிடம் உள்ள பத்தாயிரம் டன் கோதுமைய மற்றும் அரிசியை உடனே தமிழகத்திற்கு இயக்குமதி செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டும் பொருட்கள் அனைத்தும் கூட்டுறவு விற்பனை கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் என்றார். இதன் மூலம் விலையேற்றத்தை கட்டுபடுத்த முடியும் என்றார்.