விவசாயிகளுக்கு தமிழக அரசு அடுத்தடுத்து வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! ஆகஸ்ட் வரை கால அவகாசம் நீடிப்பு!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் டெல்டா மண்டல பகுதியில் திமுக வாக்குச்சாவடி கலந்துரையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் தற்பொழுது அதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி புறப்பட்டு உள்ளார்.
திருச்சி வந்தடைந்த பிறகு அந்த மாவட்ட வாக்குசாவடி பொறுப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.மேலும் இன்று இரவு திருச்சி மாவட்டத்தில் தங்கிய முதலமைச்சர் ஸ்டாலின் அதனை தொடர்ந்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் கண்காட்சி விழாவில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
இந்த நிகச்சியில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பாரம்பரிய நெல் விதைகளை பராமரித்து வரும் விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார். மேலும் 50000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படம் திட்டத்தை முதல்வர் நேற்று தொடங்கி வைத்தார்.இதற்காக அரசின் எரிசக்தி மாநிலத்தில் இருந்து குறிப்பிட்ட அளவிலான நிதின் ஒதுக்கீட்டு செய்யப்பட்டுள்ளதுன் என்று கூறினார்.
இலவச மின் இணைப்பு கோரி விண்ணபித்து காத்திருப்போர் பட்டியலில் உள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இவர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.ஏற்கனவே 1 லட்சத்தி 50000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அப்பொழுது குருவை சிறப்பு திட்டத்தை பெறுவோருக்கு கால அவகாசம் நீடிக்கப்படும் என்று கூறினார்.அந்த வகையில் இந்த அவகாசம் ஆகஸ்ட் 15 ம் தேதி வரை நீட்டிக்க பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குருவை சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் பயன்படுத்தும் உரம் ,இடுப்பொருள் போன்றவற்றை மானிய விலையில் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.