தமிழக வீராங்கனை கோமதியின் தங்கப் பதக்கம் பறிப்பு – 4 ஆண்டுகள் தடை

0
96

கடந்த ஆண்டு தோஹாவில் நடந்த ஆசியப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றவர் தமிழகத்தை சேர்ந்த கோமதி.

ஆசியப் போட்டி போன்ற பெரிய போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு ஊக்க மருந்து சோதனை மேற்கொள்ளப்படுவது வழக்கம். அப்படி கோமதிக்கு நடத்தப்பட்ட முதற்கட்ட ஊக்க மருந்து சோதனையில் அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதியானது.

இதனால் கடந்த ஆண்டு மே மாதம் அவர் போட்டிகளில் பங்கேற்க தற்காலிக தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது 2ஆம் கட்ட சோதனையிலும் அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதால், அவர் 4 ஆண்டுகளுக்கு போட்டிகளில் பங்கேற்க அத்லெடிக் இன்டெக்ரிடி யூனிட் அமைப்பு தடை விதித்துள்ளது மேலும் அவரின் தங்கப் பதக்கம் பறிக்கப்பட்டுள்ளது.

முதன் முதலில் அவரின் ஊக்கமருந்து சோதனை விவகாரம் வெளிவந்த போது, தான் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை எடுத்துக் கொள்ளவில்லை என்றும், அசைவ உணவில் ஏதாவது வஸ்து கலந்திருந்திருக்கலாம் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமக்கு அளிக்கப் பட்ட இந்தத் தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகக் கூறியுள்ளார் கோமதி.