Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஐபில் கோப்பை வென்ற சென்னை அணிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து.!!

நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்தது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்களை குவித்தது. இதனையடுத்து, 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி இறுதியாக 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதையடுத்து பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் “நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற ஒவ்வொரு சிஎஸ்கே வீரர் மற்றும் உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு ரசிகர்களுக்கும் வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார்.

Exit mobile version