Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

செய்வினை வைத்து இந்தியா அணி பாகிஸ்தானை வீழ்த்தியது!!! ஜெய்ஷா மீது குற்றம் சாற்றிய நபர்!!!

#image_title

செய்வினை வைத்து இந்தியா அணி பாகிஸ்தானை வீழ்த்தியது!!! ஜெய்ஷா மீது குற்றம் சாற்றிய நபர்!!!

சமீபத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் இந்தியா அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. இதற்கு ஜெய்ஷ் அவர்கள் இந்தியா அணியை வெற்றி பெற வைக்க சூனியம் வைத்தார். அதனால் தான் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது என்று ஹரீம் ஷா என்ற நபர் கூறியுள்ளார்.

நடப்பாண்டு உலகக் கோப்பை தொடர்பு கடந்த அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் இந்திய அணி இரண்டாவது லீக் சுற்று பாகிஸ்தான் அணியுடன் கடந்த அக்டோபர் 14ம் தேதி விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 155 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து நன்றாக விளையாடி வந்தது. அதன் பிறகு 36 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து இந்திய அணி எளிமையாக பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் ஐசிசி நடத்தும் உலகக் கோப்பை தொடர்பு எட்டாவது முறையாக இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. இந்நிலையில் ஹரீம் ஷா என்ற நபர் ஒருவர் பிசிசிஐ செயலாளராக இருக்கும் ஜெய்ஷா அவர்கள் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சூனியம் வைத்துவிட்டார். இதனால் தான் இந்திய அணி வெற்றி பெற்றது என்று பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

பிசிசிஐ செயலாளராக இருக்கும் ஜெய்ஷா அவர்கள் தற்பொழுது நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடர் தொடர்பான பல முக்கியமான முடிவுகளை எடுத்து வருகின்றார். இவர் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் மகன் ஆவார். இதையடுத்து பிசிசிஐ செயல்பாடுகளில் மீதும் ஜெய்ஷா அவர்கள் மீதும் அவ்வப்போது விமர்சனங்கள் எழுந்து வருகின்றது. அந்த வகையில் ஹரீம் ஷா என்ற நபர் ஒருவர் கூறிய குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

அதாவது ஹரீம் ஷா என்ற நபருக்கு நம்பத்தகுந்த இடத்தில் இருந்து ஒரு தகவல் கிடைத்துள்ளது. அது என்னவென்றால் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அவர்கள் புகழ் பெற்ற மாந்திரீகர் கார்த்திக் சக்கரபர்த்தியை வேலைக்கு வைத்து பாகிஸ்தான் அணிக்கு எதிராக செய்வினை, சூனியம் வைத்து இந்திய அணியை வெற்றி பெற செய்துவிட்டார் என்பது தான். இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விசாரிக்க வேண்டும் என்று கரீம் ஷா அவர்கள் கூறியுள்ளார்.

Exit mobile version