திரும்ப வந்துட்டேன்னு சொல்லு…. – தோனியை போல் மாஸ் காட்டிய கேஎல் ராகுல்…!

0
116
#image_title

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு…. – தோனியை போல் மாஸ் காட்டிய கேஎல் ராகுல்…!

கடந்த சில ஆண்டுகளாக நெட்டிசன்களிடையே பயங்கரமான விமர்சனங்களை, கேள்விகளின் தாக்குதலுக்கு ஆளான கே.எல்.ராகுல் ஆசிய கிரிக்கெட் தொடரில் பட்டையை கிளப்பினார்.

கே எல் ராகுல் காயத்திலிருந்து திரும்பி வந்த பிறகு மாஸ் வீராக செயல்பட்டுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும், இலங்கைக்கு எதிராகவும் தன் திறமையை காட்டியுள்ளார். தோனியைப் போல் விக்கெட் கீப்பிங்கிலும் அவர் சூப்பராக விளையாடியுள்ளார்.

இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் கே.எல்.ராகுல் போட்டி கொடுத்தார். அப்போது அவர் பேசுகையில்,

இலங்கைக்கு எதிரான ஆட்டம் மிக சிறப்பாக இருந்தது. எங்கள் அணி கொஞ்சம் கூட நம்பிக்கையை விடாமல் விளையாடினோம். நிச்சயம் எங்கள் உடல் அளவில் பல சோதனைகளை கொடுத்தது. எனினும் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெற்றது எனக்கு மகிழ்ச்சியே.

இந்திய அணிக்காக நான் எப்போதுமே என் பங்களிப்பை அளிக்கும்போது அதில் எனக்கு திருப்தி இருக்கும். நான் 5 மாதம் காயம் காரணமாக எந்த போட்டியிலும் விளையாடவில்லை. எனக்கு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக அதை சிறந்த முறையில் பயன்படுத்த விரும்பினேன். எனக்கு இசான் கிஷனின் பார்ட்னர் ஷிப் சிறப்பாக அமைந்தது. ஸ்டெம்புக்கு பின்னால் இருக்கும்போது ஆட்டத்தில் என்ன நடக்கிறது என்று பேட்ஸ்மேன் என்ன செய்கிறார் என்பதெல்லாம் உங்களுக்கு புரியும். அதை தான் நான் குல்தீப் யாதவிடம் சொன்னேன். அது அவருக்கு உதவியது. இந்த பாராட்டை அவரிடமிருந்துநான் பறிக்க விரும்பவில்லை. நான் என்ன சொன்னேனோ அதை சரியாக செய்தார். அதற்கு ஒரு திறமை வேண்டும் என்றார்.