நல்லாசிரியர் விருது பெறுவதற்கான விதிமுறைகள்!! தமிழக அரசு வெளியீடு!!
ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களிலும் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் நினைவாக நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டிற்கான நல்லாசிரியர் விருது பெறுவதற்கான விதிமுறைகளை தற்போது பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு மொத்தம் 386 ஆசிரியர்களுக்கு இந்த நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது.
இதற்காக மாவட்ட அளவில் முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. எனவே, விருப்பமுள்ள மற்றும் தகுதி வாய்ந்த ஆசிரியர்களிடம் விண்ணப்பம் பெறவும், திறமை வாய்ந்தவர்களிடம் விண்ணப்பம் பெற தவற கூடாது என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த விருது பெறுவதற்கு ஆசிரியர்கள் குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகளாவது பணியில் இருந்திருக்க வேண்டும். மேலும், பள்ளிகளில் கற்பிப்பது மட்டுமல்லாமல் நிர்வாக பணி செய்யும் ஆசிரியர்களுக்கு இந்த விருது கிடையாது.
ஒழுங்கற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு இந்த விருது கிடையாது. வரும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ஓய்வு பெரும் ஆசிரியர்கள் இதற்கு தகுதி வாய்ந்தவர்கள் அல்ல.
அதேப்போல் அரசியல் கட்சிகளில் ஈடுப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு இந்த விருது கிடையாது. மேலும், மாநில அரசால் பரிந்துரை செய்யப்பட்டு தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுக்கும் இந்த விருது வழங்கப்பட மாட்டாது.
மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுப்பதை வணிக ரீதியாக நினைத்து டியூஷன் எடுக்கும் ஆசிரியர்கள் மற்றும் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு நடக்காமல் இருக்கும் ஆசிரியர்களுக்கும் இந்த விருது கிடையாது.
எனவே, இந்த விருது பெறுவதற்கு தகுதி உடையவர்களின் பட்டியலானது ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதிக்குள் தயார் செய்ய வேண்டும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.