சேப்பாக்கம் மைதானத்தில் 48 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் டெஸ்ட் போட்டி! 48 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மகளிர் அணி வெற்றி பெறுமா? 

0
222
Test match to be held at Chepauk after 48 years! Will the Indian women's team win after 48 years?
சேப்பாக்கம் மைதானத்தில் 48 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் டெஸ்ட் போட்டி! 48 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மகளிர் அணி வெற்றி பெறுமா?
இந்திய மகளிர் அணியும் தென்னாப்பிரிக்க மகளிர் அணியும் மோதும் கிரிக்கெட் தொடரில் ஒரு டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் 48 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் மகளிர் டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கவுள்ளது.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி வங்கதேசம் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி 5-0 என்ற கணக்கில் வங்கதேச மகளிர் அணியை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றியது.
இந்த தொடருக்கு அடுத்து இந்திய மகளிர் அணி தென்னாப்பிரிக்க மகளிர் அணியுடன் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளும் விளையாடும் கிரிக்கெட் தொடர் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ளது. அதன்படி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென்னாப்பிரிக்க மகளிர் அணி 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள், ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது.
இந்த தொடரில் 3 ஒரு நாள் போட்டிகளும் மூன்று டி20 போட்டிகளும் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது. மீதமுள்ள ஒரு டெஸ்ட் போட்டி தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்திய மகளிர் அணியும் தென்னாப்பிரிக்க மகளிர் அணியும் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஜூன் 16ம் தேதி நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து இரண்டாவது ஒருநாள் போட்டி ஜூன் 19ம் தேதியும் மூன்றாவது ஒருநாள் போட்டி ஜூன் 23ம் தேதியும் நடைபெறவுள்ளது.
இதை போல தென்னாப்பிரிக்க மகளிர் அணியும் இந்திய மகளிர் அணியும் மோதும் ஒரு டெஸ்ட் போட்டி ஜூன் 28ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து இவ்விரு மகளிர் அணியும் மோதும் முதல் டி20 போட்டி ஜூலை 5ம் தேதியும், இரண்டாவது டி20 போட்டி ஜூலை 7ம் தேதியும், மூன்றாவது டி20 போட்டி ஜூலை 9ம் தேதியும் நடைபெறவுள்ளது.
இந்த கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணியும் தென்னாப்பிரிக்க மகளிர் அணியும் மோதும் டெஸ்ட் போட்டி சிறப்பு வாய்ந்த போட்டியாகும். ஏனென்றால் சேப்பாக்கம் மைதானத்தில் இதற்கு முன்பு மகளிர் அணிகள் விளையாடிய டெஸ்ட் போட்டி 1976ம் ஆண்டு நடைபெற்றது. 1976ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியும் இந்திய மகளிர் அணியும் மோதியது. 6 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி டிராவில் முடிந்தது. அதன் பிறகு 48 ஆண்டுகளுக்கு பின்னர் சேப்பாக்கம் மைதானத்தில் மீண்டும் மகளிர் கிரிக்கெட் அணியின் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது.
இந்திய மகளிர் அணியும் தென்னாப்பிரிக்க மகளிர் அணியும் இந்த தொடரின் மூலமாக மூன்றாவது முறையாக நேருக்கு நேர் மோதுகின்றன. முதன் முதலாக 2002ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில்  தென்னாப்பிரிக்க மகளிர் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது.
இதையடுத்து 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் இவ்விரு அணிகளும் இரண்டாவது முறையாக டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இதிலும் இந்திய மகளிர் அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்பொழுது இந்திய மகளிர் அணி தென்னாப்பிரிக்க மகளிர் அணியை மூன்றாவது முறையாக எதிர்கொள்ளும் நிலையில் இந்த போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கவுள்ளது.