Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தளபதி 68 படத்தின் நியூ அப்டேட்!! விஜய்க்கு தம்பியாக நடிப்பது யார் தெரியுமா??

Thalapathy 68 Movie New Update!! Do you know who is playing Vijay's younger brother??

Thalapathy 68 Movie New Update!! Do you know who is playing Vijay's younger brother??

தளபதி 68 படத்தின் நியூ அப்டேட்!! விஜய்க்கு தம்பியாக நடிப்பது யார் தெரியுமா??

தளபதி விஜய் அவர்கள் வாரிசு படத்தை அடுத்து தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வந்த நிலையில் படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது.

படபிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவு கட்டத்தை எட்டி வருகின்ற நிலையில் தற்பொழுது அக்டோபர் 19 ம் தேதி படத்தின் பிரோமொசன் பணிகள் நடைபெறும் என்று படக்குழு கூறியுள்ளது.

விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இந்த படத்தில் முழு கவனம் செலுத்தி வருகின்றார். எனவே தளபதி ரசிகர்களும் இதனை பெரிய அளவில் எதிர்பார்த்து உள்ளனர்.

இந்த படப்பிடிப்பு 6 மாதத்தில்  125 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த படம் வெளி வருவதற்கு முன்பே 350 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த வருமானம் ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் போன்றவைகளில் அதிக வருவாய் ஈட்டியுள்ளது.

இந்த நிலையில் தளபதியின் 68 வது படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார் என்று அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இருபது வருடங்களுக்கு பிறகு தளபதியின் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசைமையக்க  உள்ளார்.

மேலும் இப்படத்திற்கு முன் தளபதி விஜய் அவர்கள் லண்டன்க்கு செல்ல உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிலையில் தளபதியின் 68 படத்தில் விஜய் அவர்களுக்கு ஜெய் அவர்கள் நடிக்க உள்ளார்.

இந்த தகவல் ரசிகர்களிடையே தீயாக கிளம்பியுள்ளது.மேலும் பகவதி படத்தில் இவர்களின் காம்போ செமையாக இருந்ததால் மீண்டும் அதனை போன்று சிறப்பக அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்கின்றனர்.

Exit mobile version