எங்களுடைய முக்கிய குறிக்கோள் அது மட்டுமே! பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு! 

0
172
எங்களுடைய முக்கிய குறிக்கோள் அது மட்டுமே! பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!
பாகிஸ்தான் கிரிக்கேட் வாரியம் அடுத்த வருடம் நடைபெறவுள்ள சேம்பியன்ஸ் டிராபி தொடரை நல்லபடியாக நடத்துவதே நோக்கம் என்றும் மேலும் தங்களுடைய முக்கிய குறிக்கோள் என்ன என்பது பற்றியும் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் அடுத்த வருடம் அதாவது 2025ம் வருடம் பாகிஸ்தானில் மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் ஐசிசி சாம்பியன் டிராபி நடைபெறவுள்ளது. இந்த தொடரில் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் எட்டு இடங்களில் உள்ள அணிகள் கலந்து கொள்ளும்.
இந்நிலையில் இந்திய அணி பாகிஸ்தான் நாட்டுக்கு செல்வது கேள்விக் குறியாக இருக்கின்றது. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்பொழுது சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்துவதே முக்கிய நோக்கம் என்று அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் “எங்களுடைய நாட்டில் அடுத்த வருடம் அதாவது 2025வது வருடம் ஐசிசி நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. தற்பொழுது சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாதுகாப்பாகவும் எந்தவித பிரச்சினையும் இல்லாமலும் வெற்றிகரமாக நடத்துவதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கவனம் செலுத்தி வருகின்றது.
அது மட்டுமில்லாமல் இந்திய அணியை தங்கள் மண்ணுக்கு வரவைக்க வேண்டும். அவர்களை பாகிஸ்தானுக்கு வரவழைத்து சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட வைப்பதே எங்களுடைய முக்கிய நோக்கமாகவும் குறிக்கோளாகவும் இருக்கின்றது
மேலும் தற்போதைக்கு இந்தியாவுடன் எந்தவொரு கிரிக்கெட் தொடரையும் நடத்துவதற்கு யோசனை எதுவும் இல்லை. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி வெளிநாட்டில் டி20 தொடர், ஒருநாள் தொடர், டெஸ்ட் தொடர் விளையாடுவதை விட தங்கள் நாட்டுக்கு வந்து விளையாடலாம்” என்று கூறியுள்ளது.