தானாக வந்த பணத்தால் ஆட்டோ ஓட்டுனருக்கு குவியும் பாராட்டு!! நேர்மைக்கு கிடைத்த பரிசு!!
இன்று அதிக அளவில் பொதுமக்கள் பெரிதும் ஏடிஎம் கார்டுகளை வைத்து ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்தி பணத்தை எடுத்து செல்கின்றனர். அதிக அளவில் வங்கிகளை விட ஏடிஎம் சேவைகளே பெரிதும் பயன்பாட்டில் உள்ளது.
அந்த ஏடிஎம் இயந்திரம் வைக்கப்பட்ட அறையில் எந்த ஒரு முறைகேடும் நடக்க கூடாது என்பதற்காக அங்கு சிசிடிவி பொருத்தப்பட்டிருக்கும்.பொதுமக்கள் எந்த வித அச்சமும் இல்லாமல் பணத்தை பெற்று கொள்ளலாம் என்று வங்கிகள் அறிவுறுத்தியுள்ளது.
இந்த ஏடிஎம் இயந்திரத்தின் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.அந்த மாவட்டத்தில் ஜெயசந்திரன் என்ற ஒரு நபர் உள்ளார். அவர் ஒரு ஆட்டோ ஓட்டுனர் என்பது குறிபிடத்தக்கது.
நேற்று பணம் எடுக்க தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி எதிரே இருக்கும் ஏடிஎம் இயந்திரத்திற்கு சென்றுள்ளார்.அங்கு அவர் பணம் எடுபதற்காக கார்டை எடுத்துள்ளார் அப்பொழுது கார்டை வைப்பதற்கு முன்பே பணம் வந்து விட்டது.
அதில் ரூ .50,000 இருந்ததை பார்த்த ஜெயசந்திரன் அது தன்னுடையது இல்லை என்பதால் நேர்மையாக சமந்தப்பட்ட வங்கிகளுக்கு சென்று அந்த பணத்தை வங்கியில் ஒப்படைத்தார்.
இப்பொழுது உள்ள இயந்திரத்தில் பணத்தை டெபாசிட் செய்வதற்கான வசதியும் அமைக்கப்பட்டதால் ஏதோ ஒரு நபர் அந்த பணத்தை டெபாசிட் செய்ய வந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது.
அதனால் அந்த பணத்தின் உரிமையாளரை வரவைத்து அவரது வங்கி கணக்கில் இந்த பணத்தை செலுத்தி விட்டதாக கூறப்படுகின்றது. இதனை செய்த ஜெயசந்திரனை அவரது நேர்மையை பாராட்டி வருகின்றனர் என்பது குறிபிடத்தக்கது.