Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்த பேட்டர்கள்!!! இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான்!!!

#image_title

பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்த பேட்டர்கள்!!! இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான்!!!

நேற்று(அக்டோபர்23) நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக் கோப்பை லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மென்கள் சிறப்பாக விளையாடி இலக்கை அடைந்து ஆப்கானிஸ்தான் அணிக்கு இரண்டாவது வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளது.

நேற்று(அக்டோபர்23) சென்னையில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இதையடுத்து முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடங்கிய வீரர் இமாம் உல் ஹக் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். மற்றொரு தொடங்கிய வீரர் சபிக்கியூ அவர்களுடன் இணைந்த பாபர் அசம் ரன்களை சேர்க்கத் தொடங்கினார்.

தொடர்ந்து விளையாடிய பாபர் அசம் மற்றும் சபிக்யூ இருவரும் அரைசதம் அடித்தனர். சபிக்யூ 58 ரன்களும் பாபர் அசம் 74 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க அதன் பின்னர் களமிறங்கிய ரிஷ்வான் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

சிறிது தாக்கு பிடித்து விளையாடிய சவுத் சகீல் 25 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய சதாப் கான். மற்றும் இப்டிகார் அஹமது இணை அதிரடியாக விளையாடியது. சதாப் கான் 40 ரன்களும் இப்டிகார் அஹமது 40 ரன்களும் சேர்த்தனர். இதனால் 50 ஓவர்களில் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் 282 ரன்களை சேர்த்தது. ஆப்கானிஸ்தான் அணியில் பந்துவீச்சில் நூர் அஹ்மது 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுகளையும், அஸ்மத்துல்லா, முகமது நபி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

283 ரன்களை வெற்றி இலகக்காக கொண்டு களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்கம் மிகச் சிறப்பாக அமைந்தது. ஆப்கானிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் முதல் விக்கெட்டுக்கு 130 ரன்களை சேர்த்தனர்.

தொடக்கிய வீரர் குர்பாஷ் அவர்கள் அரைசதம் அடித்து 65 ரன்கள் எடுத்து சிறப்பாக தொடக்கம் கொடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடங்கிய வீரர் இப்ரஹிம் ஜட்ரான் அவர்களுடன் இணைந்த ரஹமத் ஷா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து விளையாடிய இப்ரஹிம் ஜட்ரான் அரைசதம் அடித்து 87 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழக்க தொடர்ந்து விளையாடிய ரஹமத் ஷா அவர்கள் அரைசதம் அடித்து 77 ரன்கள் சேர்த்தார்.

ரஹமத் ஷாவுடன் இணைந்த ஹஸ்மத்துல்லா ஷாகிதி தனது பங்கிற்கு 48 ரன்கள் சேர்த்தார். இதனால் வங்கதேசம் 49 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி நடப்பு உலகக் கோப்பை தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்த வெற்றியின் மூலமாக உலகக் கோப்பை தொடரின் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. வெற்றிக்குத் தேவையான ரன்களில் அதிகபட்சமாக 87 ரன்களை அடித்த இப்ரஹிம் ஜட்ரான் அவர்கள் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

மேலும் உலகக் கோப்பை வரலாற்றில் ஆப்கானிஸ்தான் அணி பெறும் மூன்றாவது வெற்றி இதுவாகும். இதற்கு முன்பு 2015ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் நடப்பு உலகக் கோப்பை தொடரில் நடப்பு சேம்பியன் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இரண்டாவது வெற்றியையும் தற்பொழுது பாகிஸ்தான் அணியை வீழ்த்தி மூன்றாவது வெற்றியையும் பெற்றுள்ளது.

Exit mobile version