ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மிகப்பெரிய இழப்பு

0
104

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு  வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடைபெறவில்லை. தற்போதுதான் இங்கிலாந்தில் ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் மே மாதம் ஐ.பி.எல் போட்டிகள் நடக்க இருந்த நிலையில் இந்தியாவில் கொரோனா தீவீரமாக பரவி வருவதால் போட்டிகள் ஐக்கிய அரபு அமிரகத்தில் செப்டம்பர் 19 ல் தொடங்குகிறது.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இடையான மூன்று ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் செப்டம்பர் 4 ல் தொடங்குவதால் இந்த இருநாட்டு வீரர்களும் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க ஒரு வாரம் தாமதம் ஆகலாம் என தெரிவிக்கபட்டுள்ளது. ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணிக்கு மிகப்பெரிய  பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அந்த அணியில் ஜோஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித், ஜாஃ.ப்ரா ஆர்சர், பென் ஸ்டோக்ஸ், அண்ட்ரூ டை, டாம் கர்ரன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இவர்கள் ஐபிஎல் போட்டியின் 2-வது வாரத்தில்தான் கலந்து கொள்ள முடியும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியி் ஜோஷ் ஹசில்வுட், சாம் கர்ரன் ஆகியோர் உள்ளனர்.