ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாவது போட்டியானது அடிலெய்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மேலும் இந்திய அணி தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக வெளியேறியுள்ளார். எனவே நடக்கவிருக்கும் இரண்டாவது போட்டியில் இவர் கலந்து கொள்ள மாட்டார் என தகவல் வெளியாகி வருகிறது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதல் போட்டியில் முக்கிய பவுலர்களான மிட்செல் ஸ்டார்க் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் இருந்தாலும் இந்திய அணியின் வீரர்கள் சில்வுட்டின் பந்துக்கு தான் திணறினர்.அடுத்து நடக்க உள்ள இரண்டாவது போட்டியானது பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் ஜோஷ் ஹேசில்வுட் இல்லாதது ஆஸ்திரேலிய அணியின் பெரும் பின்னடைவாக பார்க்கபடுகிறது. இந்த போட்டியில் ஜோஷ் ஹேசில்வுட் க்கு பதிலாக ஸ்காட் போலண்ட் அணியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.