Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அதிரடியாக நீக்கப்பட்ட பயிற்சியாளர்

ஸ்பெயின் முன்னாள் வீரரான குயிக் சேட் ஸ்பெயினின் பிரபல கால்பந்து கிளப்பான பார்சிலோனா அணியின் தலைமை பயிற்சியாளராக  கடந்த 7 மாதங்களாக பணியாற்றி வந்தார். ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்  கால்பந்து போட்டியின் கால்இறுதி சுற்றில் பார்சிலோனா 2-8 என்ற கோல் கணக்கில் பேயர்ன் முனிச் அணியிடம் வீழ்ந்தது. இந்த தோல்வி பார்சிலோனா அணிக்கு மிகப்பெரிய தோல்வியாக அமைந்தது. இந்த தோல்வியின் காரணமாக பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து குயிக் சேட்டின் அதிரடியாக நீக்கப்பட்டார்.

57 வயதான ரொனால்டு கோமேன் என்பவர் நெதர்லாந்து முன்னாள் வீரரான இவர் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். நெதர்லாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ரொனால்டு கோமேன் அந்த பொறுப்பில் இருந்து விலகினார். மேலும் அவர் மூத்த வீரரான லூயிஸ் சுவாரசை கழற்றி விட்டு சில புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று கூறினார்.

 

 

 

 

Exit mobile version