Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கேட்டது ஒன்று வந்தது வேறானதால் திகைத்த வாடிக்கையாளர்! ஏடிஎம் மையத்தில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்! 

#image_title

கேட்டது ஒன்று வந்தது வேறானதால் திகைத்த வாடிக்கையாளர்! ஏடிஎம் மையத்தில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்! 

தனியார் ஏடிஎம் மையத்தில்  ரூபாய் 200 வருவதற்கு பதிலாக 20 ரூபாய் வந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். திகைக்க வைக்கும் இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நிகழ்ந்துள்ளது.

தற்போது உள்ள சூழ்நிலையில் யாரும் வங்கிக்கு சென்று பணத்தை எடுப்பதில்லை. பெரும்பாலானோர் ஏடிஎம் சென்டர் மூலமாகவே தங்களுக்கு தேவையான பணத்தை ஏடிஎம் கார்டு மூலம் பெற்று வருகின்றனர்.

நேரம் மிச்சம் மற்றும் எந்த நேரங்களில் எப்போது வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம் போன்ற காரணங்களால் ஏடிஎம் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

ஆனால் இதிலேயும் சில நேரங்களில் நமக்கு அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகள் ஏற்படுவதுண்டு. ஏடிஎம் சென்டரில் பணம் எடுக்கச் சென்றால் பணம் வராது அல்லது பரிவர்த்தனை ரத்தாகிவிடும். சில சமயங்களில் தொழில்நுட்ப பிரச்சனையால் பணம் வராமல் தடைபடுவதும் உண்டு. இத்தகைய ஒரு திகைப்பூட்டும் சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று உள்ளது.

அங்கே 200 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக  20 ரூபாய் நோட்டுகள் வந்ததாக புகார் எழுந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி அருகே சாலைப்புதூர் என்ற இடத்தில் தனியார் ஏடிஎம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் அங்கு பணம் எடுப்பதற்காக தனியார் நிறுவன ஊழியர் ஐயப்பன் என்பவர் சென்றுள்ளார். அவர் தனது ஏடிஎம் கார்டு மூலம் ரூபாய் 3500 பதிவு செய்துள்ளார். ஆனால் அவருக்கு ரூபாய் 380 குறைவாக ரூ.3140 மட்டுமே வந்துள்ளது. அதில் ஆறு 500 ரூபாய் நோட்டுகள், மற்றும் ஒரு 100 ரூபாய் நோட்டும், இரண்டு 200 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக இரண்டு 20 ரூபாய் நோட்டுகள் வந்துள்ளன.

இதைக் கண்டு ஐயப்பன் அதிர்ச்சி அடைந்துள்ளார். பணம் குறைவாக வந்த நிலையில் அது தொடர்பாக அவர் புகார் அளிக்க முயலுகையில் அங்கு புகார் அளிக்க எந்த ஒரு உதவி எண்ணும் இல்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அவர் திகைத்து நின்றார்.

அடுத்து அவர் தான் கணக்கு வைத்திருந்த வங்கிக் கிளையை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார். இதையடுத்து தனியார் ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்பும் பணிகளை கவனித்து வரும் தனியார் நிறுவன ஊழியர்கள் 20 ரூபாய் நோட்டுகள் வர வாய்ப்பு இல்லை.

இருப்பினும் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து 20 ரூபாய் நோட்டுகள் வந்தது உறுதியானால் மூன்று நாட்களுக்குள் அவரது வங்கிக் கணக்கில் உரிய பணம் செலுத்தப்படும் என்று தெரிவித்தனர்.

ஏடிஎம் மையத்தில் குறைவாக பணம் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டு தன் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version