நாளை மறுநாள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!!
தமிழகத்தில் கடந்த மாதம் ஜூன் 12 ம் தேதிதான் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது.இப்பொழுது தான் மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டு வருகின்றது.
தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டதால் வகுப்புகளை நடத்துவதற்கு போதிய கால அவகாசம் இல்லை என்று ஆசிரியர்கள் கூறி வருகின்றனர். ஆனால் தற்பொழுது மழை காரணமாக பள்ளிகளுக்கு அடிக்கடி லீவு விடப்பட்டு வருகின்றது.
மேலும் பருவமழை ஏற்பட தொடங்கி இருப்பதால் லீவு விடப்பட்டு வருகின்ற நிலையில் வரும் காலங்களில் இந்த பருவமழை தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும் கூறப்படுகின்றது.
இன்னும் பல மாவட்டங்களில் பருவமழை பெய்ந்து கொண்டு வருவதால் பள்ளிகளுக்கு லீவு விடப்பட்டு வருகின்றது.அந்த வகையில் சேலம் ,தருமபுரி மாவட்டத்தில் வருகின்ற ஆகஸ்ட் 3 ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க படுவதாக அந்த மாவட்ட ஆட்சியகள் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து தற்பொழுது ஈரோடு மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்க படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆகஸ்ட் 3 ம் தேதி சுகந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாள் என்பதால் அவரை போற்றும் விதமாக அரசால் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இதனை கருத்தில் கொண்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை விட உள்ளதாக அந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். எனவே சேலம் ,தருமபுரி ,ஈரோடு உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அரசு அறிவித்துள்ளது.