இன்று மாலையுடன் முடியும் காலவகாசம்! அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்ட முக்கிய தகவல்!
V. Senthil Balaji – செந்தில்பாலாஜி
தமிழகத்தில் கடந்த 2022 ஆம் மின் கட்டணம் உயர்வு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து மின் வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் தமிழக அரசு தற்போது அனைத்து மின் நுகர்வோருக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக மின்சார மானியம் வழங்கி வருகின்றது. அதனை தொடர்ந்து பெற வேண்டும் என்றால் மின் நுகர்வோர் அனைவரும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இல்லையெனில் மின்சார மானியம் வழங்கப்படமாட்டாது என அறிவித்து.
அதனை தொடர்ந்து மக்கள் அனைவரும் இ சேவை மையங்கள் மற்றும் மின் அலுவலகம் என அனைத்து பகுதிகளிலும் சென்று மின் இணைப்புடன் ஆதார் இணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி வரை பெரும்பாலானோர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காததால் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.
ஆனாலும் ஜனவரி 31 ஆம் தேதி முடிவடையும் நிலையிலும் 5 சதவீதம் பேர் இந்த இணைப்பை மேற்கொள்ள வில்லை. அதன் காரணமாக மீண்டும் இம்மாதம் 15 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும் என மின் வாரியத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார். இந்நிலையில் இன்று பிப்ரவரி 15 என்பதால் இன்று மாலையுடன் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணி முடிவடைகிறது.
அதனால் மின் வாரியத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் இன்று மாலைக்குள் அனைவரும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும் இனி காலவகாசம் வழங்கப்படமாட்டாது என தெரிவித்துள்ளார்.