இதுவரை செய்யாத மாபெரும் சாதனை செய்த டெல்லி அணி!! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

0
102
the-delhi-team-has-done-a-great-feat-so-far

cricket: டெல்லி அணியில் உள்ள அனைத்து வீரர்களும் பந்து வீசி மாபெரும் சாதனையை படைத்துள்ளது.

நடைபெற்று வரும் சையது முஷ்டாக் அலி தொடரில் இன்று நடைபெற்ற மணிப்பூர் மற்றும் டெல்லி இடையிலான போட்டியில் அணியில் உள்ள 11 வீரர்களும் பந்து வீசி இதுவரை இல்லாத சாதனையை செய்துள்ளது.

இன்று காலை தொடங்கிய மணிப்பூர் மற்றும் டெல்லி இடையிலான டி20 போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் மணிப்பூர் அணி டாஸ் வென்றது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது .முதலில் பேட்டிங் செய்த மணிப்பூர் 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதில் பந்து வீசிய டெல்லி அணி  அணியில் உள்ள அனைத்து வீரர்களும் பந்து  வீசி உள்ள ஒரு அறிய நிகழ்வு நடந்துள்ளது. டெல்லி அணியின் ஆயுஷ் சிங் 2 ஓவர்,  அகில் சவுத்ரி 2 ஓவர்,  ஹர்ஷ் தியாகி 3 ஓவர்,  திக்வேக் ரதி 3 ஓவர், மயங்க ராவத் 3 ஓவர், ஆயுஷ் பதொனி 2 ஓவர்,  ஆர்யன் ராணா 1 ஓவர், ஹிம்மத் சிங் 1 ஓவர், பிரியன்ஸ் ஆர்யா 1 ஓவர், யஷ் துள் 1 ஓவர், அனுஜ் ராவத் 1 ஓவரும் வீசியுள்ளனர்.

அடுத்து களமிறங்கிய  டெல்லி அணி 18.3 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் எடுத்து வெற்றியை பதிவு செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய யாஷ் துள் 59 கடைசி வரை விக்கெட் ஆகாமல் அணியின் வெற்றிக்கு வலி வகுத்தார்.