Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை! மக்களின் கோபம் இடைத்தேர்தலில் பிரதிபலிக்கும் – ஆர்.பி.உதயகுமார் 

R. B. Udhayakumar

R. B. Udhayakumar

வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை! மக்களின் கோபம் இடைத்தேர்தலில் பிரதிபலிக்கும் – ஆர்.பி.உதயகுமார் 

திமுக அரசின் மீது மக்கள் வைத்துள்ள கோபம் வருகிற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரதிபலிக்கும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். தேர்தல் பணி மேற்கொள்வதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஈரோட்டிற்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக 575 வாக்குறுதிகளை கூறியிருந்தது. ஆனால் இதுவரை எந்த வாக்குறுதிகளையும் திமுக  அரசு நிறைவேற்றவில்லை.

 அதிமுக ஆட்சியின் போது கொண்டு வந்த அம்மா ஸ்கூட்டர், தாலிக்கு தங்கம், மடிக்கணினி, அம்மா கிளினிக், அம்மா சிமெண்ட் உட்பட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை திமுக அரசு முடக்கி விட்டது. இந்த கோபம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் பிரதிபலிக்கும். ஈரோட்டில் பொதுமக்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு அளிக்க தயாராகி விட்டனர். அதிமுக வேட்பாளர் கே. எஸ்.தென்னரசு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

Exit mobile version