Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஸ்ருதியின் கணவர் வெளியிட்ட இறுதி பதிவு!! சின்னத்திரையை உலுக்கிய திடீர் மரணம்!!

the-final-post-published-by-shrutis-husband-sudden-death-that-rocked-the-small-screen

the-final-post-published-by-shrutis-husband-sudden-death-that-rocked-the-small-screen

ஸ்ருதியின் கணவர் வெளியிட்ட இறுதி பதிவு!! சின்னத்திரையை உலுக்கிய திடீர் மரணம்!!

சின்னத்திரையில் நாதஸ்வரம் என்ற சீரியலின் மூலமாக மக்களுக்கு அறிமுகமாகி அதன் பிறகு பல சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர் தான் நடிகை ஷ்ருதி சண்முகப்பிரியா ஆவார்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் ஒரு முக்கியமான நல்ல கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவர் கடந்த ஆண்டு அரவிந்த என்பவரைகாதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பாடி பில்டரான இவர் சுயமாக ஒரு உடற்பயிற்சி கூடம் வைத்து நடித்தி வந்தார். மேலும், கடந்த ஆண்டு நடைபெற்ற மிஸ்டர் தமிழ்நாடு போட்டியில் கலந்து கொண்டு “மிஸ்டர் தமிழ்நாடு” என்ற பட்டத்தையும் வென்றார்.

இந்த நிலையில் இவர் திடீரென நேற்று மரணம் அடைந்தார். மாரடைப்பின் காரணமாக இவர் இறந்து விட்டாதாக கூறப்படுகிறது. இதனால் மொத்தம் சின்னத்திரை நடிகர் பட்டாளமும் சோகத்தில் ஆழ்ந்தது.

திருமணமாகி ஒரு வருடமே ஆன நிலையில் இவருக்கு இவ்வாறு நடந்தது அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தி உள்ளது. திருமணம் ஆன நாள் முதல் இருவரும் இணைந்து இன்ஸ்டாகிராமில் புகைபடம் போடுவது, ரீல்ஸ் போடுவது என்று ரசிகர்களை மகிழ்வித்து வந்தார்கள்.

இந்த நிலையில், அர்விந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் ஸ்ருதியுடன் இருந்த புகைபடத்தை பதிவிட்டு “ நிறைவேறாத கனவுகளுடன் இறப்பதை விட நல்ல நினைவுகளுடன் இறப்பதே மேல்” என்ற பதிவிட்டிருந்தார்.

இதைப்பார்த்த அனைவரும் தற்போது மன உளைச்சலில் இருக்கிறர்கள். மேலும், ஸ்ருதிக்கு அனைவரும் ஆறுதல் கூடி வருகிறார்கள். எனவே, ஸ்ருதி நேற்று தனது சமூக வலைதள பக்கத்தில் கணவருடன் இருந்து புகைபடத்தை பதிவிட்டு

அதில், “உன் உடல் மட்டும் தான் எண்ணெய் விட்டு பிரிந்து இருக்கிறது உன் ஆன்மா எப்போதும் என்னை சுற்றி பாதுகாத்து வருகிறது” என்று உருக்கத்துடன் கூறி இருந்தார்.

மேலும், ரசிகர்கள் அனைவரும் எனக்கு தினமும் சக்தியை வழங்கி வருகிறீர்கள் உங்கள் அன்புக்கு மிகவும் நன்றி என்றும் பதிவிட்டிருந்தார்.

Exit mobile version